Categories
உலக செய்திகள்

எத்தியோப்பிய விமான விபத்து : உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த 6 மாதமாகும் – விமான நிர்வாகம்…!!

எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சுமார் 6 மாத காலம் ஆகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எத்தியோப்பியாவில் சமீபத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் எந்த வித காரணமுமின்றி  விபத்துக்குள்ளானது . இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விபத்துக்கு காரணமான விமானத்தை தடை விதிப்பதாக அறிவித்தது.  இந்நிலையில் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணி துரிதமாக நடந்துவருகிறது.

Related image

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள போயிங் 737 மேக்ஸ் விமான நிர்வாகம், விபத்தில் பலியானவர்களின்  டி.என்.ஏ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களின்  அடையாளங்கள் இன்னும் 5 அல்லது 6 மாதத்திற்குள் முறைப்படி தனி தனியாக அடையாளம் கண்டு அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளது.

 

Categories

Tech |