பெல்ஜியம் அறிவியலாளர்கள் விலங்கு ஒன்றின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லாமாக்கள் (llama) எனப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்குகளின் உடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் மிகவும் நெருங்கி வருவதாக கருதப்படுகிறது.
லாமாக்களின் இரத்தத்தில் உள்ள இந்த ஆன்டிபாடிகள் முதலில் எச்.ஐ.வி சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்த ஆன்டிபாடிகள் மெர்ஸ் (MERS) மற்றும் சார்ஸ் (SARS) ஆகிய வைரஸ்களின் சிகிச்சையில் பலனளிக்கக்கூடியவை என ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே கொரோனாவையும் இந்த ஆன்டிபாடிகள் அழித்துவிடும் என்று நம்புவோம்..