பிரபல நடிகை திரிஷா டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்பு உட்பட அனைத்து தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் டான்ஸ் ஆடுவது, சமையல் செய்வது என தினமும் எதையாவது செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் எப்போதும் பிஸியாக இருந்து வரும் நடிகை திரிஷா டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நேரத்தில், வீட்டை விட்டு வெளியே போக முடியாததால் டிக் டாக் அக்கவுண்ட் ஓபன் பண்ணி ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். தற்போது அந்த டிக் டாக் வீடியோ காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
https://www.instagram.com/p/B_IMNcyFJjX/?utm_source=ig_web_button_share_sheet