மகர ராசி அன்பர்களே… இன்று செயல்கள் தன்னம்பிக்கையுடன் நடைபெறும் நாளாகவே இருக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள்.தொழில் வளர்ச்சி மேலோங்கும்.வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.
சரக்குகளை அனுப்பும் பொழுது கவனம் இருக்கட்டும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமாக அலைய வேண்டி இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி குறையும்,சில நேரங்களில் தேவையில்லாத பிரச்சனைகளும் நடக்கும்.கூடுமானவரை வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.
உங்களுடைய பேச்சிலும் செயலிலும் கவனமுடன் இருங்கள்.தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும்,பழைய பாக்கிகளும் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை மற்றும் நீல நிறம்