பிரதமர் மோடி நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவித்ததோடு மட்டுமல்லாமல் கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநில அரசாங்கங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் இந்த காணொளியில் ஆலோசனை நடத்தி மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். இதில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் எந்த அளவு இருக்கின்றது என்று கேட்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சரும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தததோடு, தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் கிட்டுகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்தார். இதற்க்கு பிரதமர் மோடியும் துரித பரிசோதன கருவிகளை தமிழகத்திற்கு அதிகமாக கொடுப்பதாக தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கேட்டதும் பிரதமர் கொடுப்பதாக சொல்லி இருக்கின்றார் என்றால் அது தான் தமிழகத்தின் சாதனை. அதாவது தமிழகத்தில் தான் கொரோனா இருக்கிறதா ? இல்லையா என்று கண்டறியும் ஆய்வு மையம் அதிகம் இருக்கின்றது. மத்திய அரசிடம் அதிகமாக ஆய்வு மையம் அமைக்க அனுமதி பெற்ற தமிழகத்தின் மீது மத்திய அரசின் பார்வை இருந்து வந்த நிலையில் அதற்க்கு ஏற்றாற்போல தமிழகமும் அதிகமானோரை குணப்படுத்தி அசத்தியது.
அதே போல தான் தமிழகத்திற்கு தற்போது அதிக ரேபிட் கிட்டுகளை கொடுத்தாலும் அதை வாங்கி பலனளிக்கும் வகையில் தமிழகம் செய்லபடும், மேலும் அதிகமானோரை தமிழக சுகாதாரத்துறை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் முதல்வர் கேட்டதும், பிரதமர் ஓகே சொல்லி இருக்கின்றார். அதே போல நேற்று தமிழகத்துக்கும், தமிழக மருத்துவருக்கும், தமிழக அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.