தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல தஞ்சையில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 40,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், 21,381 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 20 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.