அமமுக கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை TTV தினகரன் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , தமாக 1 , N,.R காங்கிரஸ் ( புதுச்சேரி ) தொகுதியிலும் , திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 10 , சிபிஎம் 2 , சிபிஐ 2 , விசிக 2 , மதிமுக 1 , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 , இந்திய ஜனநாயக கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகின்றது . திமுக_வும் , அதிமுகவும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றது .
அதே போல கமலின் மக்கள் நீதி மய்யம் , நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது . அதே போல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் அமமுக நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.