இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய சிம்பு, அஜித் படத்தை பார்க்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லாம் சுகமே என்ற நிலை பெறும் வகையில் வீட்டிலேயே முடங்கி இருங்கள் என்று கூறியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய படங்களில் சிலவற்றை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையிலும் இளைஞர்கள் சிலர் வெளியில் சுற்றுவதை நிறுத்துவதில்லை.
இதன் தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் கௌதம் மேனன் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருங்கள் என்றும் வீட்டில் இருக்கும் பொழுது தான் இயக்கிய அச்சம் என்பது மடமையாடா, என்னைஅறிந்தால் ஆகிய திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.