ஊரடங்கு உத்தரவால் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தாய்ப்பால் பெற இயலாத குழந்தைகளுக்கு சேரலாக், ஜூனியர் ஹார்லிக்ஸ் போன்ற உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே தட்டுப்பாட்டை போக்கி குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் குறிப்பாக மளிகை கடை மற்றும் காய்கறிகள் ஆகியவை கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு உணவு பொருட்களும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பிறந்த குழந்தை முதல் மற்றும் 5 வயது குழந்தை வரை தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் இது போன்ற உணவு பொருட்களை நம்பி இருக்கிறது.
குறிப்பாக NAN, NESTUM, சேரலாக் போன்ற உணவு பொருட்கள் கிடைக்காமல் இருப்பதாக மருந்து விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் உற்பத்தியாளர்களிடமிருந்து தங்கள் நேரடியாக சென்று வாங்க வேண்டும் எனவும் அதற்கான மொத்த தொகையும் உடனடியாக கொடுக்க வேண்டுமெனவும் உற்பத்தியாளர்கள் நிர்பந்திக்கும் காரணத்தினால் இதுபோன்ற குழந்தைகளுக்கான உணவு பொருட்களை வாங்கி விற்கமுடியவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற குழந்தைகளுக்கான உணவு பொருட்களை வாங்குவதற்கும் மேலும் இதுபோன்று மொத்தமாக பணத்தை கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்திக்கின்ற உற்பத்தியாளர்களுக்கு அரசு நடவடிக்கை எடுத்து இதற்கான போக்குவரத்து வாகன வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அப்பொழுதுதான் குழந்தைகளுக்கான உணவு தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.