பாலியல் தொல்லை தாங்க முடியாமல் உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் ஆட்டோவிலிருந்து பாதியில் கீழே குதித்த இளம் பெண் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
இந்தியா முழுவதும் தற்பொழுது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என்பது இருந்து வருகிறது சமீபத்தில் தமிழகத்தில் பொள்ளாச்சி பகுதியில் பெண்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஒரு இளைஞர்கள் கும்பல் செய்து வந்தது அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு தமிழகமே பெண்களுக்கு ஆதரவாகவும் அந்த இளைஞர்களை கண்டித்து கண்டனங்களும் எழுப்பி வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன இந்தியா முழுவதுமே பெண்களை அடிமைப்படுத்தி பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் பகுதியில் பகல் நேரத்தில் ஆட்டோவில் வைத்து இளைஞர் ஒருவர் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார் இதனை அடுத்து அந்தப் பெண் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் ஆட்டோவிலிருந்து பாதியில் கீழே குதித்தது பின் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை தூக்கி விட்டு விசாரித்தனர் பின் நிற்காமல் சென்ற ஆட்டோவை நிறுத்தி அந்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்
இது உத்திரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இதுபோன்ற பாலியல் தொந்தரவு ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கருத்துக்கணிப்புகள் எழுந்து வருகின்றன