Categories
தேசிய செய்திகள்

மே 4 முதல் இந்தியாவில் விமான சேவைகள் தொடங்கும்: ஏர் இந்தியா அறிவிப்பு

மே 4ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முதலில் விமான சேவைகள் தான் நிறுத்தப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கொரோனா பரவியது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு பரவியது. மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கிய பாதிப்பு, உலகளவில் தற்போது, 22.65 லட்சத்தை தாண்டி செல்கிறது.

1 லட்சத்து 54 ஆயிரத்து 901 பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்து 81 ஆயிரத்து 343 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதற்கட்டமாக இந்தியாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டினரை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன.

அதேபோல நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2ம் கட்டமாக தற்போது அமலில் உள்ளது. இதையடுத்து, மே3ம் தேதி வரை அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இந்த நிலையில், மே மாதம் 4ம் தேதியில் இருந்து விமான உள்நாட்டு சேவைகள் இயங்கும் என ஏர்-இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

Categories

Tech |