Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொசுவை விரட்டும் கெமிக்கல் இல்லா இயற்கை வழிகள்..!!

வீடுகளில் குளிர்காலம் மட்டுமல்லாமல் கோடைகாலமும் கொசுக்களின் தொல்லை அதிகம் உள்ளது அவைற்றை போக்குவதற்கு இயற்கை முறைகள் இருக்கின்றது.

பொதுவாக கொசுக்கடி தவிர்க்க நாம் எத்தனையோ கொசு விரட்டும் சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கெமிக்கல் நிறைந்த அந்த சாதனங்களால் மூச்சுக் குழாய்ககளில்  ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தி விடும். அன்றைய காலத்தில் கொசுவை விரட்ட பெரியவர்கள் எந்த பக்கவிளைவும் இல்லாத இயற்கை முறையில் பல சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு வழிகளை இப்பொழுது பார்ப்போம்.

தீர்வு-1:

ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் 250 மில்லி சுத்தமான வேப்பெண்ணையை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை ஒரு அகல் விளக்கில் ஊற்றி பஞ்சு திரி கொண்டு விளக்கை ஏற்றுங்கள். இதனை நீங்கள் பயன்படுத்தும் அறைகளில்  வைத்துவிடுங்கள். நின்று நிதானமாக எரியும். இப்பொழுது கொசு அண்டவே அண்டாது. கெமிக்கல் கலக்காத இந்த இயற்கை முறையினால் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

தீர்வு-2:

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதி எலுமிச்சை பழத்தில் கிராம்பை நெருக்கமாக சொருகவும். வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும் ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை கிராம்பு வாசனைக்கு வராது. மேலும் பாத்திரங்களில் நீரை தேக்கி திறந்த நிலையில் வைக்கக்கூடாது. ஏ சி மற்றும் கூலர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் உப்பு தூவி வைத்தால் கொசுக்கள் அண்டவே அண்டாது. பூந்தொட்டிகள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதே போன்று திறந்த கிணறுகள், தொட்டிகளில், கொசுக்கள் புகாவண்ணம் களை எடுக்கவேண்டும். வீட்டில் ஜன்னல் கதவுகளில் கொசுவலை அடித்தும் வைக்கலாம்.

இவற்றை பின்பற்றினால் கொசுவை பற்றிய பயம் தேவை இல்லை.

 

Categories

Tech |