Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

பைசா கிடையாது, இலவசமாக உணவு – ஆவடியை கலக்கும் அம்மா மெஸ் …!!

ஆவடியில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டணம் இன்றி சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசாங்கமும், சுகாதாரத் துறையும்  ஏராளமான அறிவுறுத்தலை வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் பொது மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது.

பலர் சாப்பிட உணவு இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகின்றன. தொண்டு நிறுவனர் பல உணவுப்பொருட்களையும் வீடுகளுக்குச் சென்று அரசாங்கம் மூலமாக கொடுத்துவருகின்றன.

இந்நிலையில் ஆவடி அம்மா உணவகத்தில் கட்டணமின்றி சாப்பிடலாம். ஆவடியில் உள்ள 2 அம்மா உணவகங்களில் மே 3-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி உணவருந்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவினங்களை தனியார் நிறுவனமும், தொழிற்சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Categories

Tech |