கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 4ஆவது முறையாக மறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாடுகள் இன்று பரபரப்பாக என்ன பேசிக்கொள்வது சீனா கொரோனா உயிரிழப்பை எண்ணிக்கையில் சடுகுடு ஆடுகின்றது. ஏன் இப்படி பேசிக் கொள்கிறார்கள் ? சீனா வெளியிட்ட உயிரிழப்பு, அதாவது நேற்று முன்தினம் வரை உயிரிழப்பு சீனாவில் 3,342. ஆனால் நேற்று என்ன சொல்லி இருக்காங்க என்றால், 4,632. அதாவது வித்தியாசம் மட்டும் ஒரே நாளில் சீனாவைப் பொறுத்தவரை 1,290. இது ஒரே நாளில் நிகழ்ந்த உயிரிழப்பா? என்றால் கிடையாது. கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த உயிரிழப்பு. இந்த தகவலை ஏன் இப்போ கொடுக்குது என்று உலக நாடுகள் சீனாவை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
புதிதாக நேற்று முன்தினம் உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில், சீனா திடீரென எண்ணிக்கையை கூட்டி சொன்ன காரணம் என்ன ? என்று கேள்வியை உலக நாடுகள் வைக்கிறார்கள். பொய் சொல்வது, அடக்குமுறையை கட்டவிழ்ப்பது சீனாவிற்கு என்ன புதிதா ? டாக்டர் லீ வென்லியாங் கதை தெரியாதா ? என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
டாக்டர் லீ வென்லியாங் யார் ?
இவர் ஒரு மருத்துவர், முதல் முதல்ல கொரோனா என்ற ஒரு வைரஸ் இருக்கிறது. நான் யாருக்கு சிகிச்சை அளித்தேனோ அவர்களுக்கு ஒரு புதிய வைரஸ் தொற்று இருக்கிறது. என்று டாக்டர்களின் வாட்ஸப் நம்பரில் தகவல் பரிமாறிக்கொள்கிறார். டாக்டர் எல்லாரும் பரபரப்பாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு விட்டுறாங்க. டாக்டர் லீ இந்த மாதிரி சொல்லி இருக்காரு, புதிதாக ஒரு வைரஸ் இருக்கிறதா ? அவர் உணர்கிறார் என்று சொல்லி தகவல் போகுது. சீன அரசுக்கும் தகவல் போகிறது. இதனால் சீனா போலீஸ் மூலமாக அந்த டாக்டருக்கு அடி, உதை, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார்கள். பின்னனர் அந்த டாக்டர மரணமடைகிறார்.
இதற்க்கு சீனா, டாக்டர் மரணம் அடைந்ததற்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார், இதனால் வைரஸ் தொற்று அவருக்கும் ஏற்பட்டு மரணமடைந்தார் என சீனா விளக்கம் அளித்துள்ளது.சர்வதேச ஊடகங்கள் என்ன செய்தி வெளியிட்ட அப்படின்னா? சீனா இந்த சம்பவத்திற்கு வருந்துகின்றது என்கிற மாதிரி தகவலை வெளியிட்டார்கள்.
சீனாவின் பொய் தகவல் குறித்து ஏற்கனவே அமெரிக்கா அதிபரை எரிச்சரித்த அமெரிக்க உளவு பிரிவான சிஐஏ. சீனா கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்று கொடுக்கும் தகவல் நம்பத்தகுந்தது அல்ல. இதில் எதோ மறைக்கப்படுகின்றது என்று சிஐஏ வெள்ளை மாளிகைக்கு தகவல் சொல்லி இருந்தார்கள்.சீனாவில் இருந்து பரவிய வைரஸ், சீனாவின் எதிரி நாடான அமெரிக்காவை பந்தாடி விட்டது.
மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் அதிகம் கொரோனவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 34,000த்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். மொத்தமாக 6 லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்போம் என அமெரிக்க உளவுத்துறை சொன்ன அடுத்த நாளே சீனா தன் மரண எண்ணிக்கையை கூட்டியுள்ளது.
”மரண எண்ணிக்கையை அரசுக்கு சரியாக சொல்லவில்லை” என மருத்துவர்கள் மீது பழிபோடுகின்றது.வீட்டில் இறந்தவர்கள் கணக்கு எங்களுக்கு வரவில்லை. மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்கிறதில் ரொம்ப கவனமாக இருந்த காரணத்தினால் அரசுக்கு எத்தனை பேர் மரணமடைந்தார் என சொல்ல தவறிவிட்டார்கள். உண்மையை சொன்ன மருத்துவர்கள் துணிவார்களா ? அடுத்த மாதம் சம்பளம் வாங்க உயிர் அவசியம் ஆயிற்றே! என்று சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா விவகாரத்தில் சீனா உயிரிழப்பு எண்ணிக்கையை மாற்றி மாற்றி சொல்வது இது நான்காவது முறை. இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா கொடுத்து வந்த பண உதவியை நிறுத்த போகிறது. காரணம் உலக சுகாதார நிறுவனம் சீனா பக்கம் சாய்ந்து விட்டது, சீனா உண்மையை மறைத்து மறைத்து பேசுகிறது என ஏற்கனவே அமெரிக்க அதிபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.