Categories
அரசியல்

தமிழகம் செம மாஸ்…. தூக்கி நிறுத்திய எடப்பாடி…. இந்தியளவில் ஜொலிக்கிறார்….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வர் ஒரே நாளில் தமிழகத்தை இந்தியளவில் ஜொலிக்கவைத்து அசத்தியுள்ளார்  

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன.

Coronavirus: In worst-hit Maharashtra ,70% of patients are below ...

அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் கொரோனாவுக்கு 3,205 பேர் பாதிக்கப்பட்டு 300 பேர் குணமடைந்தனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லியில் 1,640 பேருக்குகொரோனா உறுதி செய்யப்பட்டு 51 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக தமிழகமும், கேரளாவும் மகாராஷ்டிராவை மிஞ்சும் அளவுக்கு கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களாக இருந்து வந்தன. நாளாக நாளாக தமிழகத்திலும், கேரளாவிலும் கொரோனா கட்டுக்குள் வந்தது.

Maharashtra Continues To Lead In Coronavirus Cases With Tally At ...

தமிழகத்திலும் கடந்த மூன்று நாட்களாக தினமும் 40க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 56 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1323ஆக உயர்ந்தது. அதே போல நேற்று ஒரே நாளில் மட்டும் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் குணமடைந்த மாநிலமாக இந்தியளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Tamil Nadu CM EPS seeks Rs 4,000 crore package from Centre to ...

ஒரே நாளில் இந்தியளவில் தமிழகம் 2ஆம் இடம் பிடித்துள்ளது. பிற மாநிலங்களையும் வியப்படைய வைத்துள்ளது. தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த எடுத்துக்கொண்ட நடவடிக்கைதான் இதற்கு காரணம் என்றும் பலரும் தமிழக அரசைப் பாராட்டி இருக்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை இந்தியளவில் தூக்கி நிறுத்தி, கதாநாயகனாக ஜொலிக்கின்றார். 

Categories

Tech |