தென் ஆப்பிரிக்காவில் யானைக்குட்டி ஒன்று சுற்றுலாப் பயணிகளுடன் விளையாட அடம்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள சபி ஸெண்ட் விலங்கியல் பூங்காவில் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் ஒட்டி வந்த ஜீப்பை யானை குட்டி ஓன்று வழி மரித்தது. அந்த யானை குட்டி ஜீப்பின் அருகே சென்று அவர்களை எங்கும் நகர விடாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட யானை ஆய்வாளர் ஒருவர் வழக்கமாக மனிதனை யானை தாக்குவதற்கு தான் இதுபோன்று ஓடி வரும் என்று தெரிவித்தார்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக தாங்கள் பார்த்த யானை குட்டி பழக்கவழக்கங்கள் மூலம் தங்களை விளையாட அழைத்துள்ளது என்று தெரிவித்தார். அதற்கேற்றவாறு அங்கும் இங்கும் உருண்டு பிரண்டு அழிச்சாட்டியம் செய்து விளையாடிய யானைக்குட்டியின் சேட்டைகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.