Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க போராட்டம்…… 172 பேர் மீது வழக்கு பதிவு….!!

விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  பெயரை வைக்க கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 172 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்க கோரி தேவர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே கோரிக்கையை வைத்து மதுரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படை , பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர் அமைப்புகளை சார்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Image result for விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயர்

இந்நிலையில் இதே கோரிக்கையை வைத்து நேற்றைய தினம் தேவர் அமைப்புகளை சார்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது . இதில் போலீசாருக்கும் , போராட்டக்காரர்களுக்கு சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்தது . இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 172 பேர்  மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Categories

Tech |