Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே வரல… தாயம் தான் விளையாடினோம்: பூந்தமல்லியில் இருவருக்கு கொரோனா!

சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் தாயம் விளையாடியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தமல்லியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அதில் 6வது வார்டில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது குடும்பம் மற்றும் அருகில் உள்ள 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 15 பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு எவ்வாறு பரவியது என்பது இதுவரை தெரியவில்லை.

கொரோனா பாதித்த நபரின் மனைவி மற்றும் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் பூந்தமல்லியில் கொரோனா பாதித்த நபர் அண்மையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயம் விளையாடி உள்ளார். அதன்காரணமாக அவரது நண்பருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக பூந்தமல்லி நகராட்சி உள்ள 21 வார்டுகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லியில் யாரையும் வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதி வழங்கப்படவில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கே வந்து கொடுக்கும் நடைமுறையை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |