புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. அவ்வாறு வெளியே வரும் மக்களை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் கடும் பாடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. அதில், 10,477 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1489 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் இறப்புகள் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நமது உயிரை காக்க மருத்துவர்களும், காவல்துறை அதிகாரிகளும், தூய்மை பணியாளர்களும் போராடி வருவது குடிப்பிடத்தக்கது.
இந்த நிலையியல், விதியை மீறி அனாவசியமாக வெளியே வரும் மக்களுக்கு தகுந்த தண்டனையை கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இன்று காலை புனேவின் பிப்வேவாடி பகுதியில் மக்கள் சிலர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் நடுரோட்டில் நிற்க வைத்து யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். பின்னர் வெளியே வரக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.