கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை பெறப்பட்ட கொரோனா நிவாரண நிதி 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
கடந்த 7 நாட்களில் மட்டும் 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரை பெறப்பட்டது என தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிக்கு கடந்த 6ம் தேதி வரை பெறப்பட்ட மொத்தத் தொகை 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இதை நிலையில், கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சார்பில் 14 கோடியே 10 லட்ச ரூபாய், அதிமுக சார்பில் ரூ.1 கோடி, காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ. 1 கோடி, நடிகர் அஜித்குமார் ரூ.50 லட்சம், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக நிதிகள் வழங்கப்பட்டன. இதை நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி, 134 கொடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.