Categories
நாமக்கல் மாநில செய்திகள்

போலீசுக்கு முட்டை….. எங்களுக்கு தேவையானது எங்கே…..? அமைச்சர் காரை மறித்து….. துப்புரவு பணியாளர்கள் போராட்டம்….!!

நாமக்கல்லில் அமைச்சர் காரை மறித்து துப்புரவு பணியாளர்கள் முககவசம், கையுறை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் இலவசமாக முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறை சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு தலா 30 மூட்டை இலவசமாக வழங்கினர். பின் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள 250 வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ராசிபுரம் மருத்துவமனையில் 100 பேருக்கும் தலா 30 முட்டைகளை இலவசமாக வழங்கினர்.

இதையடுத்து நாமக்கல்லை நோக்கி அமைச்சர்கள் இருவரும் காரில் பயணிக்க புதிய பேருந்து நிலையம் அருகில் வரும்போது தூய்மைப் பணியாளர்கள் காரை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர்.

முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தினந்தோறும் வழங்கப்படுவதில்லை. அதனை உரிய முறையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், மருத்துவ பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Categories

Tech |