கொரோனாவிற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருட காலம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இதற்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து ஜெனிவாவில் டாக்டர் மார்க்ரெட் ஹாரிஸ் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது “கொரோனாவை தடுக்க தடுப்பூசி சோதனை பலநாடுகளில் ஆய்வகங்களில் மட்டும்தான் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தான் 90% கொரோனா தொற்று பரவி உள்ளது. அதேநேரம் ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் துருக்கி மற்றும் பிரிட்டனில் சற்று அதிகமாகவே பரவி உள்ளது” என கூறினார்.