கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் விகிதம் நாடு முழுவதும் குறைவாகவே உள்ளது.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 19 லட்சத்து 46 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 111 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். 13 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவும், குணமடைய அதிகளவு நாட்கள் எடுப்பது இந்தியாவிலும் பிரதிபலித்தது. இங்கு 10 ஆயிரத்து 815 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தில் ஆயிரத்து 190 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 353 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது. இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204ஆக உயர்ந்தது. 81 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளரிடம் இதே கேள்வி கேட்கப்பட்ட போது கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு முழு சிகிச்சை அளித்து கொரோனா இல்லையென்று உறுதியாகிய பின்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்து அனுப்புகின்றோம்எ அதனால் தான் குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று விளக்கம் அளித்தார்.