ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்கின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் இருக்கும் சம்பாபேட் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தனது பகுதியில் திண்டாடி வந்த குடிமகன்களுக்கு மது இலவசமாக வழங்கினார்.

Man distributes free alcohol to labourers (one-peg each) in Hyderabad who desperately needed it. He had some stock left with him and tried to help out people who can't sustain without alcohol. Good or bad? pic.twitter.com/Z91XkwRVr9
— Nirupam Banerjee (@nirupamban) April 13, 2020