Categories
தேசிய செய்திகள்

என் அன்பான நாடே அழு – மோடி கருத்துக்கு ப.சிதம்பரம் விமர்சனம் …!!

பிரதமரின் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நாளான இன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவு மூலம் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய  அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகளை மறுபரிசீலனை செய்கிறோம். ஊரடங்கை நீட்டிப்பதற்கான நிர்பந்தத்தை நாங்கள் புரிந்துக் கொண்டு ஆதரிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Enforcement Directorate to quiz P Chidambaram in aviation scam

மேலும், பிரதமரின் புத்தாண்டு செய்தியில் ‛புதியது’ என்ன? ஏழைகளின் வாழ்வாதாரம், அவர்களின் உயிர்வாழ்வு ஆகியனை அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் இல்லை என்று விமர்சித்தார். முதல்வர்களின் நிதி கோரிக்கைக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அதே போல ரகுராம் ராஜன் முதல் ஜீன் ட்ரீஸ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை அவர்கள் கூறிய அறிவுரையை கேட்கவில்லை. ஏழைகள் 21+19 நாட்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள விடப்பட்டுள்ளனர். பணம் இருந்தும் அரசாங்கம் எதையும் வெளியிடாது. என் அன்பான நாடே, அழுங்கள் என்று பிரதமர் மோடியின் கருத்தை விமர்சித்துள்ளார்.

Categories

Tech |