சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ 500 அபராதம் விதிக்கப்டுகின்றது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தில் சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று நேற்று உத்தரவிட்டபட்டது.
வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய தவறும் பட்சத்தில் அவர்களுடைய வாகனங்களில் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படுவது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சென்னையில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மளிகை பொருட்கள் மற்றும் பிற தேவைகளுக்கு மக்கள் வெளியே வந்தால் நிச்சயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை காவல்துறையினர் ”மாஸ்க்” அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ 500 அபராதம் விதித்து வருகின்றனர்.