Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகனுக்கு எதுவும் ஆக கூடாது – விஜயின் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி ..!!

வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற தனது மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக வெளிவருவது தடைப்பட்டு பிரச்சினைகள் முடிந்த பின்னர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ஆழ்ந்த துயரத்தில் இருந்து வருகிறார்.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜயின் மகன் சஞ்சய் கொரோனா தொற்று பரவலை தடுக்க போக்குவரத்து தடை செய்யப்பட்டதை தொடர்ந்து வீடு திரும்ப முடியாமல் வெளிநாட்டிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது மகன் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என நினைத்து விஜய் மிகுந்த சோகத்தில் இருப்பதாக பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |