Categories
உலக செய்திகள்

எங்கள நெருங்க கூட முடியாது – கொரோனாவுக்கு சவால் விடும் நாடுகள் …!!

வளர்ந்த நாடுகளை தாக்கி கதிகலங்க வைத்த கொரோனா தொற்று பல  சிறிய நாடுகளுக்குள் நுழைய முடியாமல் தவித்து நிற்கின்றது 

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,  இங்கிலாந்து, சீனா போன்றவைகளே கொரோனாவை கண்டு கதிகலங்கி நிற்கும் நிலையில் சிறிய நாடுகளில் இதுவரை கொரோனா தொற்று அடி எடுத்து வைக்கவில்லை எனும்பொழுது ஆச்சரியம் அதிகரிக்கிறது. அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் ஆனால் ஆஸ்திரேலியாவின் அருகே அமைந்திருக்கும் சிறு சிறு நாடுகளில் இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை.

பலாவு

பசுபிக் பெருங்கடலின் அருகில் இருக்கும் ஒரு தீவு தான் பலாவு நாடாகும். நாட்டின் பரப்பளவு மொத்தம் 459 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே. முதலில் இந்நாட்டில் இருக்கும் 73 வயது வயதான ஒருவருக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு  பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தோற்று இல்லை என்பது முடிவானது. இதுவரை இந்த சிறிய நாட்டில் ஒருவர்கூட கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சாலமன் தீவுகள்

மெலனீசியாவில் பப்புவா நியூ கினியின் கிழக்கே கிட்டத்தட்ட 1,000 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுதான் சாலமன் தீவு. இங்கு மூன்று பேர் கொரோனா தொற்று அறிகுறியுடன் இருந்ததை தொடர்ந்து அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவாகியுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

போட்ஸ்வானா

போட்ஸ்வானா குடியரசு என அழைக்கப்படும் போட்ஸ்வானா நாடு பல நாடுகளினால் சூழப்பட்ட தென்னாப்பிரிக்கா நாடாகும். இந்த நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை.

தொங்கா

தொங்கா இராச்சியம் பொலினீசியாவில் அமைந்துள்ள ஓர் இறையாண்மை நிறைந்த நாடு இது. 177 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் தான் இந்த தொங்கா நாடு யாரும் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

பார்படாஸ்

அதிக மக்கள்தொகை கொண்ட பார்படாஸ் வளம் நிறைந்த கரீபியன் தீவுகளில் ஒன்று. இந்த நாட்டிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை.

இந்த நாடுகளைப் போன்று மார்ஷல் தீவுகள், சிரியா, பிஜி போன்ற நாடுகளிலும் இதுவரை யாரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை

Categories

Tech |