Categories
அரசியல்

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்….. இன்று ஸ்டாலின் வெளியிடுகின்றார்….!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றது என்ற பட்டியலை ஸ்டாலின் இன்று வெளியிடுகின்றார்.

 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது .கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என்று முடிவாகியுள்ளது.

 

திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 20 , காங்கிரஸ் 10 , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 , மார்க்சிஸ்ட் 2 , விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 2 , மதிமுக 1 , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 , இந்திய ஜனநாயக கட்சி 1 மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 தொகுதிகள் போட்டியிடுகின்றன . இந்நிலையில் கூட்டணி கட்சி மற்றும் திமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்று பேச்சுவார்த்ததை நிறைவடைந்த நிலையில் திமுக . தலைவர் ஸ்டாலின் இன்று தொகுதிகள் பட்டியலை வெளியிடுகின்றார் .

Categories

Tech |