தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனாவை வைரஸ் பரவலை தடுத்து, கட்டுப்படுபடுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு நீடித்து உத்தரவு பிறப்பித்தது. வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டார். அதில் ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அறிக்கை மூலம் தெளிவு படுத்தினார்.
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். முதலமைச்சர் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது விழித்திருங்கள் – விலகியிருங்கள் -வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை பின்பற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது அறிக்கை மூலம் வலியுறுத்தி இருந்தார்.