Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள்

காய்கறிகள் இலவசம்…. இலவசம்…. வாட்சப் வதந்தியை நம்பி…… ஏமாந்து போன வியாபாரி….!!

திருப்பத்தூரில் வாட்ஸ்அப் வதந்தியை நம்பி காய்கறி வியாபாரி ஒருவர் ஏமாந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இதை பயன்படுத்தி பலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூரில் உள்ள பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி கடை ஒன்று தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. திருப்பத்தூர் பகுதி மக்கள் பெரும்பாலானோர் அங்குதான் காய்கறிகளை வாங்க வருவார்கள். இன்று முதல் அந்த காய்கறி கடைகள் செயல்படாது என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இதை உண்மை என நம்பி அப்பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரி ஒருவர் காய்கறி வீணாகக் கூடாது என்பதற்காக விற்பனைக்காக வைத்திருந்ததை இலவசமாக பொதுமக்களுக்கும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் வழங்கினார். இதனால் கூட்டம் கூட மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதோடு, காய்கறி கடைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தொடர்ந்து கடைகள் செயல்படும் என்று அறிவித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த பதில் கடைக்காரருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. 

Categories

Tech |