Categories
தேசிய செய்திகள்

செவிலியர்க்கு கொரோனா தொற்று – மருத்துவமனையில் அனுமதி

பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்  புனேவில் உள்ள தனியார் பல்நோக்கு  மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதோடு பாதிக்கப்பட்ட செவிலியருடன் பணியில் ஈடுபட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் பாதரே கூறுகையில் “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியரின் உடல்நிலை சீராக இருக்கிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்படுகிறது” என கூறினார்

Categories

Tech |