ரஜினியின் வீட்டு முன்பு நிவாரண நிதி கேட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதனால் பலரும் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் திரைப் பிரபலங்கள் பலர் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் வருமானம் இன்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பெப்சிக்கு ரூபாய் 50 லட்சத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி இல்லத்தின் முன்பு நிவாரண நிதி கொடுக்குமாறு 8 திருநங்கைகள் கடந்த வெள்ளியன்று போராட்டம் செய்துள்ளனர். திருநங்கைகள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் ரஜினியின் குடும்பம் அதிர்ச்சியடைந்தது. பின்னர் லதா ரஜினிகாந்த் ரூபாய் 5 ஆயிரத்தை காவலாளி மூலம் திருநங்கைகளிடம் கொடுத்துள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநங்கைகளின் திடீர் போராட்டம் குறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்