மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய தகவல்கள் குறித்து ட்விட்டரில் ப. சிதம்பரம் தகவல் அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நாட்டு நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதில் ஊரடங்கை இரு வாரங்களுக்கு 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.
ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா ரூ. 5000 தந்தால் மொத்தச் செலவு ரூ 65,000 கோடி. இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள் என பட்டியலிட்டுள்ளார். அதில்,
மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள்
1. மத்திய அரசு மாநிலங்களுக்கு இதுவரை தந்தது டிசம்பர்-ஜனவரி மாதங்களின் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை; மாநில பேரிடர் நிதியிலிருந்து முதல் தவணை; மற்றும் ரூ 15,000 கோடி சுகாதார கட்டுமான நிதியிலிருந்து ஒரு பங்கு.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 12, 2020

2. விரைவு பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்வதில் தடங்கல், தாமதம் ஏற்பட்டுள்ளது.
3. எல்ஐசி (LIC) கிளை அலுவலகங்கள் திறக்கப்படவில்லை, ஏன் என்று தெரியவில்லை.
மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள்
1. மத்திய அரசு மாநிலங்களுக்கு இதுவரை தந்தது டிசம்பர்-ஜனவரி மாதங்களின் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை; மாநில பேரிடர் நிதியிலிருந்து முதல் தவணை; மற்றும் ரூ 15,000 கோடி சுகாதார கட்டுமான நிதியிலிருந்து ஒரு பங்கு.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 12, 2020
4. வங்கிகளில் தங்க நகைக் கடன்களை தர மறுக்கிறார்கள். நடுத்தர வர்க்க மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள்? என குறிப்பிட்டுள்ளார்.