ரோஸ் செடிக்கு மண் கலவை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
ரோஸ் செடி வாங்கிடிங்களா, அப்போ மண் கலவை எப்படி தயார் செய்வது என்று யோசிக்கிறீங்களா? அப்படினா இதை ட்ரை பண்ணுங்க.. உங்கள் ரோஸ் செடி நன்றாக வளரும். அது மட்டுமின்றி ரோஸ் செடியில் அதிக தளிர்கள் விட்டு, பூக்களும் நிறைய பூக்க ஆரமித்து விடும்.
தேவையான பொருட்கள்:
- செம்மண் – 3 மடங்கு
- ஆற்றுமண் – 2 மடங்கு
- தொழு உரம் அல்லது ஆட்டு புழுக்கை அல்லது மண்புழு உரம்- இவைகளில் ஏதுனும் ஒரு மடங்கு அளவு எடுத்துக்கொள்ளவும்.
- காய்ந்த வேப்பிலை – 2 மடங்கு
- முட்டை ஓடு தூள் செய்தது – 2 ஸ்பூன்
- கற்றாழை – சிறிதளவு
- சாம்பல் – ஒரு கைப்பிடி அளவு
- சூடோமோனாஸ் – 1 ஸ்பூன்
- டிரைக்கோடெர்மா விரிடி – 1 ஸ்பூன்
- அசோஸ்பைரில்லம் – 1 ஸ்பூன்
- பாஸ்போ பேக்டீரியா – 1 ஸ்பூன்
செய்முறை:
ரோஸ் செடிக்கு செம்மண் சிறந்தது. செம்மணலில் அனைத்து செடிகளை வைத்தாலும் நன்றாக வளரும். எனவே செம்மண் இரண்டு மடங்கு எடுத்து கொள்ளவும். பின்னர் அதோடு ஒரு மடங்கு ஆற்றுமண் எடுத்து செம்மனுடன் சேர்த்து கொள்ளவும்.
பிறகு தொழு உரம் அல்லது மண்புழு உரம் இரண்டில் ஏதேனும் ஒன்றை ஒரு மடங்கு எடுத்து செம்மண்ணுடன் கலந்து கொள்ளவும். தொழு உரம் மற்றும் மண்புழு உரம் கிடைக்க வில்லை எனில் ஆடு புழுக்கையை கூட பயன்படுத்தி கொள்ளலாம். ரோஸ் செடி செழிப்பாக வளரும்.
பின்பு காய்ந்த வேப்பிலையை ஒரு மடங்கு சேர்த்து கொள்ளவும். பிறகு சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா ஆகிய உரங்களை ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். தங்களுக்கு இந்த உரங்கள் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை மற்ற அனைத்து கலவைகளையும் கட்டாயமாக சேர்த்துவிடுங்கள்.
அடுத்ததாக பொடி செய்து வைத்துள்ள முட்டை ஓடை ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். பின்பு சாம்பல் ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து இந்த கலவையில் சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தான் இந்த அனைத்து கலவைகளையும் ஒன்றாக கலந்து ஐந்து நாட்கள் வரை ஈரப்பதத்துடன் வைத்திருந்த பிறகு இந்த மண் கலவையில் ரோஸ் செடியை நடவும்.
முக்கிய குறிப்பு:
மண் கலவை தயார் செய்த உடனேயே ரோஸ் செடியை நட்டுவிட விடாதீர்கள். ஐந்து நாட்கள் கடந்த பிறகுதான் நடவேண்டும். ஏன் என்றால் இந்த மண் கலவையில் சேர்க்கப்பட்டுள்ள உரங்கள் நூன்னுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். எனவே ஐந்து நாட்களுக்கு பிறகு ரோஸ் செடியை நடுங்கள்.