Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 19 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு!

ரேஷன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருள் தொகுப்பு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு, சீரகம் உள்பட 19 வகை மளிகைப்பொருட்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவு கடந்த 24ம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் பல்வேறு இடங்களும் முடங்கி உள்ளது. இதனால் மளிகை பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 மற்றும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய இலவச பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஷன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருள் தொகுப்பு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மளிகை பொருட்கள் தட்டுபாடு மற்றும் விலையேற்றம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மக்கள் கூடுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் காலை 6 மணி முதல் 1 மணிவரை கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குறைந்த நேரத்திலும் அதிக மக்கள் கூடுவதால் அதனை தடுக்கும் நோக்கத்தில் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், மிளகாய், மஞ்சள் தூள், டீ தூள், உப்பு, பூண்டு, சோம்பு, மிளகாய் தூள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.500க்கு வழங்க உள்ளனர்.

Categories

Tech |