குஜராத் மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பதித்தோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. இது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” கடந்த 24 மணி நேரத்தில் 978 மாதிரிகளை சோதனை செய்யப்பட்டன.
அதில், 67 பேருக்கு COVID19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் 259 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2 வென்டிலேட்டர்கள் உதவியோடு சிகிச்சையில் உள்ளனர்” என தெரிவித்தார். நேற்று குஜராத் மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 இருந்த நிலையில் 308 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என கூறலாம். எப்போது கொரோனாவுடன் இருந்து விடிவு காலம் கிடைக்கும் என மக்கள் அனைவரும் எதிரிபார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.