Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா நிதி திரட்ட களமிறங்கிய ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா…!!

கொரோனா ஊரட‌ங்கால் அவதிப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிதி திரட்ட ஹாலிவுட் நடிகர் நடிகைகள் நேரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்நிலையில் தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு திட்டத்தை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ள சூழலில் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி கொரோனா நிதி திரட்ட உள்ளார்கள்.

இந்த நேரடி நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதி தொகையை உலக சுகாதார நிறுவனத்திற்கும், சுகாதார பணியாளர்களுக்கும் வழங்க உள்ளார்கள். ஏற்கனவே ஷாருக்கான் தனது பட நிறுவனம் சார்பில் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி வழங்கி இருக்கிறார்.

Categories

Tech |