Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கிருமி நாசினி சுரங்கப்பாதை” கிருமிகள் உள்ளே வந்தால் செத்துவிடும் – காவல்துறை அசத்தல்

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்காக காவல்துறை சார்பில் கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில, மத்திய அரசுகள் எடுத்து வருகின்றன. அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி மருந்து வைத்து வருபவர்களின் கைகளில் தெளித்து உள்ளே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர்களே முககவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை தயாரித்து பணியிலிருக்கும் காவலர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

மேலும் கோட்டூர்புரம், மதுரவாயல், கோயம்பேடு முதலிய பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க கிருமிநாசினி சுரங்கப்பாதையை ஏற்பாடு செய்துள்ளனர். அதன் முதற்கட்டமாக சென்னை வேப்பேரியில் இருக்கும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதியில் கிருமிநாசினி சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையின் உள்ளே நுழைந்தால் உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |