இன்று கொரோனா பாதித்த 96 பேரில் 26 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக ஈரோட்டில் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டுக்கு அடுத்தபடியாக நெல்லையில் புதிதாக 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாளில் சென்னையில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.