தொகுப்பாளினி பாவனா ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
கடந்த சில காலமாக தமிழர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியாக வந்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவரது பரதநாட்டியத்தை பார்த்து ரசிகர்கள் வேரலெவல், சூப்பர், ஆங்கர் பண்ணுறீங்க, பாடுறீங்க, ஆடுறீங்க செம சிஸ்டர் என பல்வேறு விதமாக புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.
https://www.instagram.com/tv/B-tMlMnBB7d/?utm_source=ig_web_button_share_sheet