Categories
மாநில செய்திகள்

கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு – முதல்வர் பழனிசாமி பேட்டி!

கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிக்கு 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக பணிகள் அளிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருகின்றன என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் 738 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் மேலும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன என தெரிவித்துள்ளார்.

ஏப்., 14ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற கேள்விக்கு கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல்
செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |