Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த திட்டமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதலாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை மூடியது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான சூழல் காணப்படுவதால் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமா? இல்லையா? என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதேபோல 12ம் வகுப்பு தேர்வுகள் பல நடைபெற்று முடிந்ததும் குறிபிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.’மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 679 பேருக்கு ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இந்த தகவலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |