கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் உட்பட 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் 12 குழுக்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக நமக்காக உழைக்கும் மருத்துவ பணியாளர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறியவே இந்த குரல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.