மே, மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது தான் 10 லட்சம் மாணவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து வருகிற 13ம் தேதி வரை இந்த தேர்வை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனோவின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முதலில் சட்டப் பேரவைகளில் வருகிற 15-ம் தேதியிலிருந்து இந்த தேர்வு நடைபெறும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களின் மத்தியில் பேசிய முதல்வர், இந்த கொரோனோவின் தாக்கம் குறைந்த பிறகு இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த சூழலில்தான் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
கல்வித்துறை வட்டாரத்தில் நாம் பேசியபோது உறுதியான இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்கள். மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது. மே மாதம் இறுதி வாரத்தில் இந்த தேர்வு நடப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மிகவும் முக்கியமானது.
பதினோராம் வகுப்பில் எந்த குரூப்களில் மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்கு இந்த பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் அட்மிஷன் நடைபெறுகிறது. அதுபோன்று IDI படிப்பிற்கு முக்கியமான சான்றிதழ் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தேர்வு தான் தகுதியானதாக இருக்கிறது. குரூப்-4 தேர்வு உள்ளிட்ட படிப்புகளுக்கும் இந்த பத்தாம் வகுப்பு தேர்வு முக்கியமானதாக இருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக பத்தாம் வகுப்பு தேர்வை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
கொரோனா காரணமாக இந்தத் தேர்வை எந்த காரணம் கொண்டும் ரத்து செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதுதான் கல்வித்துறை வட்டாரத்தில் தகவல்களாக இருக்கிறது. பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தத் தேர்வு நிச்சயமாக மே மாதம் நடத்தப்படும் என்ற தகவல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதுபோன்று கூடுதல் தகவல்கள்; ஏற்கனவே மாணவர்களுக்கு அதிக அளவில் விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது எனவே, போதிய இடைவெளி இல்லாமல் குறைந்த நாட்களில் அதிக பட்சமாக ஒரு பத்து நாட்களுக்குள்ளாக இந்த தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும், அதே போல தமிழகம் முழுவதும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் தொற்று வரலாம் என்று சந்தேகப்பட கூடிய நபர்களும் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அருகாமையில் ஏற்கனவே இருக்கக்கூடிய திட்டமிட்டு இருக்கக்கூடிய தேர்வு மையங்கள் எத்தனை என்ற விவரங்களையும் கல்வித்துறை தயாரித்திருக்கிறது. சுகாதார துறையிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விவரங்களை எல்லாம் ஏற்கனவே கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனையொட்டி மேலும் இருக்க கூடிய தேர்வு மையங்கள் அனைத்தையும் வேறு பகுதிக்கு மாற்றுவது அல்லது அருகில் இருக்கக்கூடிய வேறு தேர்வு மையங்களுடன் மாணவர்களை இணைப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான பணிகளும் கல்வித்துறையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனை அடுத்து தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. எனவே மே மாதத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து உறுதியாகி இருக்கிறது என்பதுதான் கல்வித்துறையின் தற்போதைய தகவலாக இருக்கிறது.