Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்க்’ பயன்படுத்த வேண்டாம்… கர்சீஃப் யூஸ் பண்ணுங்க… விஜய் தேவரகொண்டா அறிவுரை!

நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, முகத்தைமூட துணியை பயன்படுத்துங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, என அனைத்து மொழி படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

அதில், அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். துணியால் முகத்தை  மூடுவது நோய் (கொரோனா) தொற்றை குறைக்கும். மருத்துவர்களுக்கான மருத்துவ முகமூடிகளை விட்டுவிடுங்கள், அவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ளட்டும். அதற்கு பதிலாக ஒரு கைக்குட்டை, துண்டு, துப்பட்டா போற்றவற்றை பயன்படுத்துங்கள். உங்கள் முகத்தை மூடி, பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-rBy-KBG7v/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |