Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில்  கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  வேகமாக பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் 5,194பேர் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 149  பேர் பலியாகியுள்ள நிலையில், 402 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ல் இருந்து 5,194ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,018 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |