பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பல்வேறு நாட்டில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றது குறித்த செய்தி தொகுப்பை காணலாம் .
பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய கொடூரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கு C.B.I விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது .
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பிற நாடுகளில் என்ன தண்டனை வழங்கப்படுகின்றது என்று காணலாம் .
அமெரிக்கா :
அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்க சட்டத்தில் இடமுள்ளது .
நெதர்லாந்து :
நெதர்லாந்து நாட்டில் மகளிருக்கு எதிரான எந்த செயலும் பாலியல் பலாத்காரமாகவே பார்க்கப்படும் . ஒரு பெண்ணை விருப்பமின்றி முத்தமிட்டாலும் அது பலாத்காரமாகவே கருதப்படும் .தவறு செய்தவரின் குற்றவாளிகளின் வயதைப் பொறுத்து 4 முதல் 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க நெதர்லாந்து சட்டத்தில் இடம் உள்ளது .