அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் 7ஆவது இடத்தில் இருக்கின்றது. ஈரானில் இதுவரை 60,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவ்சாவி செய்தியாளர்களிடம் பேசிய போது,கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கிய மனிதாபிமான உதவிகளை ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் தங்களுக்கு உதவிகள் வேண்டும் என்று ஈரான் ஒருபோதும் அமெரிக்காவிடம் கேட்டதில்லை என்று கூறிய அப்பாஸ், தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.