Categories
கல்வி மாநில செய்திகள்

S.S.L.C தேர்வு இன்று தொடக்கம்…… தமிழகம், புதுவையில் 9, 97, 794 பேர் எழுதுகின்றனர்….!!

S.S.L.C தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கின்றதை முன்னிட்டு அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி  அனைத்து தேர்வு ,மையங்களுக்கும் சுற்றைக்கை அனுப்பிள்ளார்.

இந்த 2018-19_ஆம் கல்வியாண்டுக்கான S.S.L.C  பொதுத்தேர்வானது இன்று தொடங்கி வருகிற 29-_ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.மொழிப்பாட தேர்வுகள் மாலை 2 மணிக்கும் , மற்ற பாடங்கள் காலை 10 மணிக்கும் நாடைபெறுகின்றது . இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் மொத்தமுள்ள 12,546 பள்ளிகளில் படிக்கும் 9 ,  59, 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38, 176 பேரும் என்று மொத்தம்  9, 97, 794 மாணவ , மாணவிகள் தேர்வை எழுதுகிறார்கள் .

Image result for S.S.L.C தேர்வு

 

S.S.L.C தேர்வுக்கு 49 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட இருக்கின்றனர். தேர்வு பணியிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் . தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள்  காப்பி அடிப்பதை தடுக்க  5, 500 பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது . தேர்வு எழுதும் மையத்திற்கு மாணவ-மாணவிகள் செல்போன் எடுத்து வருவது முற்றிலும் தடை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் தேர்வு நடைமுறை விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி  சுற்றைக்கை அனுப்பியுள்ளார்.

Categories

Tech |